DEPARTMENT OF TAMIL

About the Department

அன்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை 2006-ஆம் ஆண்டு முதல் செம்மையாகவும், சிறப்பாகவும் செயலாற்றி வருகின்றது. முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களால் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவ/மாணவியர்களின் மொழிப்புலமையை மேம்படுத்தவும், அறிவாற்றலை செழுமைப்படுத்தவும் அனுபவமிக்க பேராசிரியர்களால் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.வருடந்தோறும் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் மாணவ/மாணவியர்களின் பல்திறனை வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டிகளாகிய கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், நாடகம், மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்சிகள் நடத்தப்படுகிறது. ஈரோடு "வேர்கள்" சமூக நல அமைப்பும், கல்லூரியும் இணைந்து நடத்திய "புதிய பாதை" இளைஞர்கள் எழுச்சி காண ஒரு புதிய நிகழ்ச்சி, சமூக விழிப்புணர்வு பாடல் மற்றும் குறு நாடகங்கள் நடைபெற்றது. மற்ற கல்லூரிகளில் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும், போட்டிகளில் மாணவ/மாணவிகளைக் கலந்து கொள்ளச் செய்து பரிசு பெற அளிக்கப்படுகிறது. 62 வது குடியரசு தின விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பரமத்தி வேலூர் கவியரசர் கலைத் தமிழ்ச் சங்கம் நடத்திய மாநில அளவிலான ஓவியப்போட்டியில் மூன்றாமாண்டு துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையில் பயிலும் ஈ.கவின்குமார் பரிசு வென்றார். தமிழ்த்துறை சார்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் ஆர்வலர் விருது வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழ்த்துறை முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

Enquire now